(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதைத் தடுப்பதற்காக கடற்படையினரால் நாட்டின் பல பாகங்களிலும் கிருமி நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய கொழும்பு மெனிங் சந்தையிலும் கிருமி நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரல் பியல் டி சில்வாவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தியாவசிய சேவையின் பொருட்டு கொழும்பு மெனிங் சந்தை ஊரடங்கின் போதும் திறக்கப்படுகிறது. அதன் காரணமாகவே அங்கு கிருமி நீக்கல் நடவடிக்கை முன்னெடுப்பட்டுள்ளது.

இதே போன்று ஏனைய பொது சந்தைகளிலும் கிருமி நீக்கல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.