புதுக்குடியிருப்பு கைவேலியை சேர்ந்த முன்னாள் போராளியின் பண்ணையின் மூன்று வைக்கோல் பட்டறைகள் நேற்று (27)விஷமிகளால் தீ வைக்கப்பட்டதில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ காரணமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கைவேலி புதுக்குடியிருப்பில் உள்ள பண்ணையின் நேற்றைய தினம் காலை 11.20 மணியளவில் வைக்கோல் பட்டறைக்கு அடையாளம் தெரியாதவர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிராமசேவையாளருக்கும், பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், நேற்று மாலைவரை எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையென குறித்த பண்ணையின் உரிமையாளர் விசனம் வெளியிட்டுள்ளார்.

வறட்சி மற்றும்  ஊரடங்கு நிலமையால் தாம் பெரும் பொருளாதார ரீதியாக சரிவை  எதிர்கொண்டு வரும் வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை தமக்கு மிகுந்த வேதனையையும் மனவுளைச்சலையும்  தருவதாக உரிமையாளர் கவலைவெளியிட்டுள்ளார். 

அத்துடன் தமது வைக்கோல் பட்டறைக்கு தீ வைத்தவர்கள் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.