உலகெங்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொராேனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கை ஆணொருவர் சுவிற்சர்லாந்தில் உயிரிழந்துள்ளார்.



மேற்படி உயிரிழந்தவர், யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடையவரெனவும், கடந்த 25ஆம் திகதி இவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த இவரது இறுதிக் கிரியைகள் அந்நாட்டிலேயே இடம்பெறுமெனவும், அது தொடர்பாக சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.