2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு : 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

16 அணிகள் பங்கேற்கும் 7 ஆவது இருபதுக்கு : 20  உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது.

அதைத் தொடர்ந்து 8 ஆவது இருபதுக்கு : 20 உலகக் கிண்ணத் தொடரானது அடுத்த ஆண்டு இந்தியாவில் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியிலும் 16 அணிகள் களம் இறங்குகின்றன. இவற்றில் 4 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

இந்த தகுதி சுற்றின் ஒரு பகுதி போட்டிகள் அடுத்த மாதம் முதல் ஜூன் வரை நடக்க இருந்தது. 

எனினும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து உயர்வடைந்து செல்கின்றமையினால் தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் அறிவித்தது.

ஜூன் மாதத்திற்கு பிறகு நிலைமையை ஆராய்ந்து தகுதி சுற்று போட்டி எப்போது நடத்தப்படும் என்பதை ஐ.சி.சி. அறிவிக்கும்.