கூலிவேலை செய்வோர், சுயதொழில் முயற்சியாளர்களுக்கு அவசர உதவி வழங்க வேண்டும் - சஜித்

27 Mar, 2020 | 05:52 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலையின் காரணமாக அன்றாடக் கூலிவேலை செய்வோர், சுயதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

எனவே அரசாங்கம் தலையீடு செய்து அவர்களுக்கான நிவாரணத்தை வழங்குவதுடன் இ உணவுப்பொருட்களைப் பெற்றுக்கெர்டுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் காணொளிப் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலினால் நாடு என்ற வகையில் பாரிய நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கும் இத்தருணத்தில், நாமனைவரும் ஒன்றிணைந்து, இச்சவாலை எதிர்கொள்வதன் ஊடாக இதிலிருந்து மீளக்கூடிய சக்தி எம்மிடம் இருக்கிறது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். அதேபோன்று கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான போராட்டத்தில் முன்நின்று செயற்படும் அனைத்து சுகாதார சேவையாளர்கள்இ முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எமது மனமார்ந்த நன்றியையும் கூறிக்கொள்கிறேன்.

இன்றளவில் அன்றாடக் கூலிவேலை செய்வோர்இ சுயதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் அரசாங்கம் தலையீடு செய்து அனைவருக்கும் ஓர் அடிப்படை நிவாரணத்தை வழங்கிஇ உணவையும் பெற்றுக்கெர்டுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்களை முன்நிறுத்திய அந்தப் பொறுப்பிலிருந்து ஒருபோதும் விலகக்கூடாது என்று அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றேன்.

சமுர்த்திப் பயனாளிகளுக்கான கொடுப்பனவைப் பொறுத்தமட்டில் ஒரு தொகுதியினருக்குத் தற்போது வழங்குவதற்கும், மற்றொரு தொகுதியினருக்குக் கொடுப்பனவைத் தாமதப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது சமுர்த்திப் பயனாளிகளை இரு தொகுதியாகப் பிரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே அக்கொடுப்பனவை சமுர்த்திப் பயனாளிகள் அனைவருக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விவசாயம், பயிர்ச்செய்கை மற்றும் மீன்பிடி ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தவர்களும் தற்போதைய நெருக்கடி நிலையினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதில் ஏன்...

2026-09-09 17:44:22
news-image

பெருந்தோட்டச் சமூகத்தின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்களை...

2026-09-09 16:28:56
news-image

பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவிக்கு 15...

2026-09-09 17:38:30
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கையிடம் வெளிப்படைத்தன்மையுடனான அர்ப்பணிப்பு...

2026-09-09 19:45:08
news-image

16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகள்...

2026-09-09 16:30:03
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் அரசாங்கம்...

2026-09-09 16:42:49
news-image

செம்மணி தொடர்பில் இலங்கை அரசின் தலையீடற்ற...

2026-09-09 19:43:56
news-image

நாமலை கைது செய்து பொதுஜன பெரமுனவுக்கு...

2026-09-09 16:44:54
news-image

சர்வதேச அமைப்புகளை அவமதிப்பது புரிதலின்மையை வெளிப்படுத்துகிறது;...

2026-09-09 16:45:30
news-image

சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை படுகொலைகள் : சுயாதீன...

2026-09-09 19:48:51
news-image

இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE...

2026-09-09 20:38:55
news-image

முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு...

2026-09-09 20:34:08