திரு­கோ­ண­ம­லையில் அமெரிக்­கா­வின் முகா­மொன்று அமைக்­கப்­ப­­ட­வு­ள்­ள­தோடு, இதன்­மூலம் தெற்­கா­சி­யாவின் பாது­காப்பை தனது அதி­கா­ரத்தின் கீழ் கொண்­டு­வர அமெ­ரிக்கா முயற்­சிப்­ப­தாக சம­ச­மாஜக் கட்சியின் பொதுச் செய­லாளர் பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண  தெரிவித்தார். 

இந்­திய ரூபாவின் மதிப்­பினை உயர்த்­திய அந்­நாட்டு மத்­திய வங்கி ஆளுநர்  கொள்கை முரண்­பாட்டால் பதவி விலகப் போகிறார். ஆனால் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­தை சீர­ழித்த மத்திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் தொடர்ந்தும் பதவியில் உள்ளார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாடொன்றில் உரை­யாற்­றுகையிலேயே பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண மேற்­கண்­ட­ட­வாறு கூறினார்.