கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனையை நிறைவுசெய்த சமார் 501 பேர் கொண்ட நான்காவது குழுவினர் இன்று காலை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 25 பேரும், புனாணை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 167 பேரும், தியத்தலாவை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 309 பேரும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு இராணுவத்தினரால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.