களனி கேபிள்ஸ் பிஎல்சி, ABC ட்ரேட் அன்ட் இன்வெஸ்ட்மன்ட் (பிரைவட்) லிமிட்டெட் உடன் இணைந்து உலகப் புகழ்பெற்ற நுகர்வோர் பற்றரி நாமமான Maxell ஐ நாடு முழுவதும் விநியோகிக்க முன்வந்துள்ளது.

உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. 

இந்நிகழ்வின் போது களனி கேபிள்ஸ் பிஎல்சி பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால மற்றும் ABC ட்ரேட் அன்ட் இன்வெஸ்ட்மன்ட் (பிரைவட்) லிமிட்டெட் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அமல்ராஜா ஜயசீலன் ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர்.

ஜப்பானின் Maxell Hitachi  நிறுவனத்தினால் Maxell! பற்றரிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இலங்கையில் ஆயஒநடட பற்றரிகளை விநியோகிப்பதற்கான அங்கீகாரம் பெற்ற முகவராக யுடீஊ ட்ரேட் அன்ட் இன்வெஸ்ட்மன்ட்

(பிரைவட்) லிமிட்டெட் திகழ்கிறது. இலங்கையில் விநியோகிக்கப்படும் Maxell பற்றரிகளில் பல்வேறு தெரிவுகள் உள்ளடங்கியிருக்கும்.

களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றும் போது,

 இலங்கையில் பாதுகாப்பான மின்சார மற்றும் தொடர்பாடல் வயர்கள் விற்பனையில் நுகர்வோரின் நம்பிக்கையை வென்ற நாமமாக களனி கேபிள்ஸ் திகழ்கிறது.

“Maxell பற்றரி வர்த்தக நாமம் என்பது உலகளாவிய ரீதியில் 40 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக இலங்கையிலும் இந்த பற்றரி வகைகளை விநியோகிப்பதற்கான தீர்மானத்தை நாம் மேற்கொண்டோம். எமது நுகர்வோர்கள் இந்த நீடித்துழைக்கும் பற்றரியின் மூலம் பெருமளவு அனுகூலத்தைப் பெறுவார்கள்” என்றார்.

Maxell ஏசியா கம்பனியின் பணிப்பாளர் அலெக்ஸ் வொங் கருத்து தெரிவிக்கையில்,

உலகளாவிய ரீதியில் நுகர்வோர்கள் மத்தியில் Maxell மிகவும் புகழ்பெற்ற பற்றரி வர்த்தக நாமமாக திகழ்கிறது என்றார்.

“களனி கேபிள்ஸ் போன்ற முன்னணி நிறுவனமொன்று முன்வந்து இந்த விநியோக செயற்பாட்டை இலங்கையில் முன்னெடுக்க முன்வந்துள்ளதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இலங்கையைச் சேர்ந்த நுகர்வோர்களுக்கு இந்த சிறந்த சந்தர்ப்பத்தின் மூலமாக நீடித்துழைக்கும் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்” என்றார்.

ABC ட்ரேட் அன்ட் இன்வெஸ்ட்மன்ட் (பிரைவட்) லிமிட்டெட் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அமல்ராஜா ஜயசீலன் கருத்து தெரிவிக்கையில்,

“எமது கம்பனி இலங்கையில் பல புகழ்பெற்ற வர்த்தக நாமங்களுக்கான ஏக விநியோகஸ்த்தராக திகழ்கிறது. இதில் Maxell வர்த்தக நாமத்தையும் உள்வாங்கியுள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். 

மிகச் சிறந்த தரம் வாய்ந்த Maxell பற்றரி மூலமாக இலங்கையின் நுகர்வோருக்கு சிறந்த அனுபவத்தை பெற்றுக் கொடுக்கிறோம். மாபெரும் மற்றும் வினைத்திறன் வாய்ந்த விற்பனை செயலணியை கொண்டுள்ள களனி கேபிள்ஸ் நிறுவனத்தை விநியோக செயற்பாடுகளுக்காக நாம் தெரிவு செய்துள்ளோம்” என்றார்.

இந்நிகழ்வில் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி அசிர சில்வா, Maxell பற்றரிக்கான உற்பத்தி முகாமையாளர் பேஷல உதித மற்றும் ட்ரேட் அன்ட் இன்வெஸ்ட்மன்ட் பிரைவட் லிமிட்டெட் வலய சந்தைப்படுத்தல் முகாமையாளர் நாமல் பெரேரா ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

களனி கேபிள்ஸ் நிறுவனத்திலிருந்து, சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் அனில் முனசிங்க, பிரதம நிதி அதிகாரி ஹேமமாலா கருணாசேகர, ஏற்றுமதிகளுக்கான சந்தைப்படுத்தல் முகாமையாளர் தேவிந்த லொரென்சுஹேவா, வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க, விற்பனை முகாமையாளர் சமிந்த வைத்தியதிலக, விற்பனை கட்டுப்பாட்டாளர் ரால்ஃவ் ரொஷான், வலு மற்றும் சக்தி - விற்பனை முகாமையாளர் ரோஹண வாத்துவகே மற்றும் களனி லைட்டிங்ஸ் விற்பனை முகாமையாளர் அஜந்த யைன்ன ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

களனி கேபிள்ஸ் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் அனில் முனசிங்க கருத்து தெரிவிக்கையில்,

களனி கேபிள்ஸின் இளம் மற்றும் அர்ப்பணிப்பான விற்பனை செயலணி மூலமாக இலங்கையின் சந்தைப்படுத்தல் களத்தில் காண்பிக்கும் ஈடுபாட்டின் மூலமாக Maxell பற்றரிகளை இலங்கை நுகர்வோரின் சிறந்த தன்னிறைவை உறுதி செய்யும் வகையில் விநியோக செயற்பாடுகளை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில்,

களனி கேபிள்ஸ் மூலமாக விநியோகிக்கப்படும் பொருட்கள் பாதுகாப்பான முறையில் பாரியளவு சந்தையை சென்றடைகின்றன. ஒவ்வொரு தயாரிப்பும் உயர் தரத்தை கொண்டதாகவும், சிறந்த சந்தைப்படுத்தல் வினைத்திறனையும் கொண்டனவாக அமைந்துள்ளன.

“நுகர்வோர் மற்றும் விற்பனை முகவர்கள் களனி கேபிள்ஸ் வர்த்தக நாமத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே அவர்கள் மாற்றுச் சிந்தனையின்றி எமது தயாரிப்புகளை கொள்வனவு செய்கின்றனர். ஜப்பானிய தொழில்நுட்பத்தில் சந்தையில் பற்றரிகளுக்கு தட்டுப்பாடு நிலவியதைத் தொடர்ந்து இந்த தீர்வை நாம் முன்வைத்துள்ளோம்” என்றார்.

களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 46 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 2008 இல் களனி கேபிள்ஸ் பிஎல்சி “சுப்பர் பிரான்ட்” நிலையை எய்தியிருந்தது. குறிப்பாக நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பாண்மைச் செயற்பாடுகளுக்காக கம்பனி இந்த நிலையை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. 

2013 இல் இடம்பெற்ற SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் வழங்கலில்ரூபவ் இதே பிரிவில் தங்க விருதை தனதாக்கியிருந்தது. SLITAD மக்கள் அபிவிருத்தி 2013 விருதுகள் வழங்கும் நிகழ்வில், தனது ஊழியர்களின் பயிற்சிகள் மற்றும் மற்றும் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமைக்காக தங்க விருதையும் தனதாக்கியிருந்தது. களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று,

சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

2015 இல் களனி கேபிள்ஸ் பிஎல்சி ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் விருதை தனதாக்கியிருந்தது. களனிகேபிள்ஸ் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்கள் உற்பத்தி பிரிவு, 2015 தேசிய பசுமை விருதுகள் வழங்கலில் நிலைபேறான அபிவிருத்திக்காக கௌரவிக்கப்பட்டிருந்தது. 2015 இல் நிறுவனம் SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதையும் தனதாக்கியிருந்தது.