உலகெங்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொராேனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கை ஆணொருவர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்துள்ளார்.மேற்படி உயிரிழந்தவர், யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதுடையவரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த இலங்கையின் முதலாவது நபர் இவரென்பதுவும் குறிப்பிடதக்கது.