கர்ப்பிணித்தாய்மார்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்..!

Published By: J.G.Stephan

27 Mar, 2020 | 12:39 PM
image

(நா.தனுஜா)
நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவும் நோக்கில் இலங்கை மகப்பேற்றியல் கல்லூரியின் மகப்பேற்று வைத்திய நிபுணர்கள் 071 0301225 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.



இதனூடாகத் தொடர்புகொண்டு கர்ப்பிணித்தாய்மார்கள் வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இது குறித்து இலங்கை மகப்பேற்றியல் கல்லூரியின் பணிப்பாளரான மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி யு.டி.பி.ரத்னசிறியினால் விடுக்கப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நாடளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், நாம் பெண்களின் சுகாதார நிலை குறித்து வெகுவாக அவதானம் செலுத்தியிருக்கிறோம். இத்தகையதொரு சூழ்நிலையில் கர்ப்பிணித் தாய்மாரை எவ்வித மாற்றுக்கருத்துமின்றி, மிகுந்த அக்கறையுடன் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எமக்கிருப்பதாகக் கருதுகின்றோம்.

நாட்டின் தற்போதைய நெருக்கடியில் கர்ப்பிணித் தாய்மார்கள் தமது உடல் சுகாதார நிலை குறித்து வெகுவாகக் கவலையடைந்திருக்கிறார்கள். கொவிட் - 19 வைரஸ் தொற்று மற்றும் ஏனைய மகப்பேற்றுச் சிக்கல்கள் குறித்த அச்சம் அவர்களிடம் காணப்படுகின்றது.

கர்ப்பிணித் தாய்மாரின் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாக அவர்களுக்கு உதவும் நோக்கில் 24 மணிநேரமும் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். கர்ப்பிணித்தாய்மார் 071 0301225 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு தமது சந்தேகங்களை அல்லது பிரச்சினைகளை எம்மிடம் தெரிவிக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59