கண்ணா லட்டு தின்ன ஆசையாபட புகழ் நடிகரும், வைத்தியருமான சேதுராமன் மாரடைப்பால் நேற்றிரவு சென்னையில் காலமானார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையாஎன்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் சேது என்கிற சேதுராமன். இவர் நடிகர் மட்டுமல்ல தோல் சிகிச்சை நிபுணரும் கூட. இவருக்கு  சென்னை மற்றும் மும்பையில் சொந்தமாக மூன்று தோல் சிகிச்சை அளிக்கும் பிரத்யேக வைத்தியசாலை இருக்கிறது. இவர்கண்ணா லட்டு தின்ன ஆசையாஎன்ற படத்தைத் தொடர்ந்து, வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா, 50 /50 ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

நேற்றிரவு சென்னையிலுள்ள அவருடைய வீட்டில் இருந்த சேதுராமனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஒன்பது மணியளவில் அவர் மரணமடைந்தார். அவருக்கு உமையாள் என்றொரு மனைவியும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.

திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நடிகர் சேதுவின் மரணத்திற்கு, திரையுலகினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தியும், பலர் இரங்கல் தெரிவித்தும் வருகிறார்கள்.