(நா.தனுஜா)
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு மிருசுவில் படுகொலை விவகாரத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருக்கும் ஜனாதிபதியின் சந்தர்ப்பவாத செயற்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிறது.
யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.
ஜனாதிபதியின் இத்தீர்மானத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறது. அப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
'தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு சிறைக்கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி மேற்கொண்டிருக்கும் சந்தர்ப்பவாத செயற்பாட்டை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இந்த விவகாரத்தைப் பொறுத்தமட்டில், குறித்த வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட நபருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இன்னும் பல வழக்குகள் குறைந்தபட்சம் விசாரணையோ அல்லது விடுதலையோ இன்றியே காணப்படுகின்றன'.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM