இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மார்ச் மாத சந்தாவை அறவிடாது: ஆறுமுகன் தொண்டமான் அறிவிப்பு

Published By: J.G.Stephan

27 Mar, 2020 | 11:28 AM
image

பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மார்ச் மாதத்திற்கான சந்தாவை அறவிடாமல் இருப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.



அத்துடன் அரிசி, மா, பருப்பு உட்பட ஆறு வகையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி பெருந்தோட்டங்களிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவக காரியாலயத்தின் நேற்று முன்தினம் 25 ஆம் திகதி இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக குடும்ப விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன. அந்தப்பட்டியல் அரச அதிபருக்கு வழங்கப்பட்ட பின்னர் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பமாகும்.

அதேபோன்று ச.தொ.ச. நிறுவனமானது லொறிகள் ஊடாகவே தோட்டங்களுக்குச் சென்று பொருட்களை விற்பனை செய்வதற்கு தயாராக இருக்கின்றது.

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனமும் லொறிகளில் சென்று மீன்களை விற்பனை செய்யவுள்ளது.

அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணப் பொதியை இலவசமாகவும் ஏனையவற்றை பணம் கொடுத்தும் பெற்றுக்கொள்ளலாம்.

எனவே பொது இடங்களில் கூட்டமாக நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோன்.

மக்களின் நலன்கருதியே அரசாங்கம் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்துள்ளது. எனவே, அதனை உரிய வகையில், பின்பற்றுமாறும் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்குமாறும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

சில தோட்டங்களில் கம்பனிகள் தொழிலாளர்களிடம் கையொப்பம் பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

அனைத்துவித சுகாதார வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என கூறியே மக்களிடம் கையொப்பம் திரட்டப்படுகின்றது.

ஆனால் சில கம்பனிகள் எவ்வித ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கவில்லை. 

எனவே கையொப்பமிட வேண்டாம் என தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். 

சவர்க்காரம், கைகளை சுத்தப்படுத்தும் திரவம் உட்பட எல்லாம் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாகவே வழங்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபரவ வழங்குவதற்கு சில கம்பனிகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன. மேலும் சில கம்பனிகள் இழுத்தடிப்பு செய்கின்றன. எனினும் அடுத்த புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

அது எமது மக்களுக்கு சார்பான தீர்மானமாகவே இருக்கும். சம்பள உயர்வை வழங்க முடியாவிட்டால் கம்பனிகள் வெளியேற வேண்டும். அதற்கான காலம் வந்துவிட்டதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள்களிடமிருந்து மார்ச் மாதத்திற்கான சந்தாப்பணத்தை அறவிடாமல் இருப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.இது தொடர்பில் கம்பனிகளுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01