அமெரிக்காவில் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எத்தனை பேர்- ரொய்ட்டர் கருத்துக்கணிப்பில் அச்சம் தரும் தகவல்கள்

27 Mar, 2020 | 12:22 AM
image

அமெரிக்காவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் அதிர்ச்சியடையவைக்கும் தகவல்கள்; வெளியாகியுள்ளன.

அமெரிக்கா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பொன்றி;ன் போது 2.3 வீதமானவர்கள் தங்களிற்கு கொரோனா வைரஸ் இருப்பது மருத்துவ பரிசோதனையின் போது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளனர்.

2.3 வீதம் என்பது பல மில்லியன் மக்களை குறிக்கும் என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

எனினும் இந்த விடைகள் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட சுய நோயறிதல் நடவடிக்கைகள்,சோதிக்கப்படாத தொழில்முறை நோயறிதல்கள் அல்லது சோதனை உறுதிப்படுத்தப்பட்ட நோயறிதல்கள் போன்றவற்றின் காரணமாக வெளியானவையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

எனினும் பேராசிரியர் ஓருவர் இதனை வெறுமனே தொற்றுநோய்க்கு எதிரான எதிர்வினையாக கருதக்கூடாது என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரிசோதனை உபகரணங்கள் அமெரிக்காவில் பற்றாக்குறையாக காணப்படுவதன் காரணமாக அமெரிக்காவில் காணப்படும் தொற்று குறித்த சரியான தகவலாக இது காணப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவே தற்போதைக்கு கிடைக்கின்ற சிறந்த தரவாகயிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 2.4 வீதமானவர்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவரிடம் தாங்கள் நெருங்கிய தொடர்பிலிருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

2.6 வீதமானவர்கள் வைரசினால் பாதிக்கப்பட்டவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களை தங்களிற்கு தெரியும் என குறிப்பிட்டுள்ளனர்.

மார்ச் 18 முதல் 24 வரை 4428 பேரை அடிப்படையாக கொண்ட இந்த கருத்துக்கணிப்பில் முன்னைய கருத்துக்கணிப்பினை விட அதிகமானவர்கள் தாங்கள் வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்

மார்ச் 16 முதல் 17 வரை மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் ஒரு வீதமானவர்களே  தாங்கள் நோயினால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தனர்.

ரொய்ட்டர் கருத்துக்கணிப்பின் மூலம் நோய் தொற்றிற்குள்ளானவர்களுடன் இளைய வயதினேரே அதிகம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுவதும் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் அமெரிக்காவின் வடகிழக்கில் அதிகளவு மையம் கொண்டிருந்தாலும்  நாடு முழுவதும் காணப்படுவதும் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13