இந்தியாவில் முடக்கல் உத்தரவுகள் உட்பட ஏனைய விதிமுறைகைளை மீறுவோர்களிற்கு எதிராக இந்திய டுகாவல்துறையினர் நடந்துகொள்ளும் விதம் குறித்து சர்ச்சைகள் தோன்றியுள்ளன.

இந்திய காவல்துறையினர் விதிமுறைகளை மீறுவோரை கடுமையாக தண்டிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

உத்தரபிரதேசத்தின் நகரமொன்றில் வீதியில் பயணிப்பவர்களை முதுகில் பைகளுடன் தாவித்தாவி செல்லுமாறு காவல்துறையினர் பலவந்தப்படுத்துவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் முடக்கல் உத்தரவை தொடர்ந்து வேறு பகுதிகளில் பணியாற்றிவிட்டு தமது பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த தொழிலாளர்களையே காவல்துறையினர் தாவிதாவிச் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

தொழிலாளர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களின் மன்றாட்டத்தை செவிமடுக்காமல் முதுகில் பையுடன் தாவிதாவிச்செல்லுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வெட்கமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துi அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளதுடன் விசாரணைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.