நோய் அபாயத்தை பயன்படுத்தி கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வதா ? மன்னிப்பு சபை சாடல்

Published By: Rajeeban

26 Mar, 2020 | 08:52 PM
image

இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கு பதிலளிக்கும் கடப்பாடு மிகவும் குறைவானதாக காணப்படும் நிலையில் மிருசுவில் படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட  சார்ஜன்ட் ரத்நாயக்காவை விடுதலை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தன்னிச்சையான தீர்மானம் மிகவும் கவலை அளிக்கும் செய்தியை தெரிவித்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

பயங்கரமான குற்றங்களை இழைத்த படைவீரர்கள், நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டாலும் மன்னி;ப்பளித்து விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கவலை தரும் செய்தியை இந்த விடுதலை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வேளையில் வழங்கிய இந்த விடயத்துடன் தொடர்புடைய ஏனைய வாக்குறுதிகள் குறித்தும் சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.

 பாரிய நோய் தொற்று அபாயத்தை பயன்படுத்;தி பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது  கண்டிக்கதக்க   விடயம் எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதிக்கான  உரிமைகள் உள்ளன,நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யவேண்டிய கடப்பாடு இலங்கைக்குள்ளது எனவும் தெரிவித்துள்ள அவர் பல வருடங்களிற்கு பின்னர், மிருசுவில் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் 2015 இல் நீதியை அனுபவித்துள்ளனர், ஜனாதிபதியின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் நீதி தலைகீழாக மாற்றப்படுவது வெறுக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40