பாகுபாடின்றி அனைத்து சமுர்த்தி பயனாளிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் - சஜித் 

By T. Saranya

26 Mar, 2020 | 07:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பாகுபாடு இல்லாத வகையில் அனைத்து சமுர்த்தி  பயனாளிகளுக்கும் அரசாங்கம் வட்டியில்லாத வகையில் 10000  ரூபா வழங்கப்படவேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் ஜனாதிபதியின் தீர்மானத்தில் சமூர்த்தி பயனாளர்களுக்கு வட்டியற்ற அடிப்படையில் 10000 ரூபாய்  வழங்கப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய மற்றும் பழைய சமுர்த்தி பயனாளிகள் என வேறுபடுத்தி,பழைய சமுர்த்தி பயனாளர்களுக்கு மாத்திரம் இந்த நிதியை வழங்க அரசாங்கம் முயற்சிப்பதாக அறிய முடிந்துள்ளது.
தற்போதைய நெருக்கடியான நிலையில் இவ்வாறு பாகுப்படுத்தி நிவாரணம் வழங்குவது. பொறுத்தமற்றதாகும். அனைத்து தரப்பினருக்கும் பொதுவான நிலையில் நிவாரணம் வழங்க வேண்டும்.
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right