சட்டவிரோதமான முறையில் வியாரபத்திற்கென வைக்கப்பட்டிருந்த 4500 போத்தல் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிரேஸ்ட மதுவரி அத்திட்சகர்   தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு கறடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரடியனாறு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வியாரபத்திற்கென வைக்கப்பட்டிருந்த 4500 போத்தல் (கால் போத்தல் கொள்ளவு கொண்ட) சாராயத்தை மட்டக்களப்பு மதுவரி திணைக்கள அதிகாரிகள் நேற்று மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது கைப்பற்றியுள்ளதாக மதுவரி திணைக்கள மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான சிரேஸ்ட மதுவரி அத்திட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட சாராய போத்தல்களின் பெறுமதி 15 இலட்சம் ரூபாய் என அவர் தெரிவித்தார்.

சிரேஸ்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரனின் பணிப்பின்பேரில் மாவட்ட மதுவரி பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையிலான மதுவரி அதிகாரிகள் இத்தேடுதலை மேற்கொண்டிருந்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக சிரேஸ்ட மதுவரி அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

- ஜவ்பர்கான்