இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரித்தானியர்கள் தொடர்பில் அவதானம்

26 Mar, 2020 | 08:28 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ள பிரித்தானியர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்களிள் சுகாதார நலன் தொடர்பில் அறிந்து கொள்வதற்காக இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சராஹ் ஹல்டன் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு புதன்கிழமை இராணுவத்தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது. சந்திப்பு தொடர்பில் இராணுவ ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தற்போதைய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள், தனிமைப்படுத்தல் நிலையங்களிலுள்ள பிரித்தானியர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை பெற்றவர்களின் சுகாதார நிலைமைகள் போன்ற விடயங்கள் தொடர்பான விளக்கங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரித்தானிய உயர் ஸ்தானிகர் இராணுவத்தளபதியை சந்தித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் வேண்டுகோளுக்கமைய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள வகிபாகம் தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது விளக்கமளிக்கப்பட்டது. இவ் வைரஸின் தீவிர தன்மை மிக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டபோது இ இராணுவம் எவ்வாறு கந்தக்காகாடு மற்றும் புனானி ஆகிய இடங்களில் ஆரம்பித்து சில நாட்களுக்குள் மிகவும் அத்தியாவசியமான இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக மேம்படுத்தியது என இச்சந்திப்பின் போது லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தினார்.

தியத்தலாவை மையங்களில் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ள ஐந்து பிரித்தானிய பிரஜைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், உணவு வகைகள் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் அவர் எடுத்துக்கூறினார்இ மேலும் அந்த நபர்கள் இரண்டு வார காலம் முடியும் வரைக்கும் எவ்வாறு உறவினர்களுடனான பிணைப்பு விடங்கள் தொடர்பாக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அங்கு வருகை தந்த உயர்ஸ்தானிகர் சுகாதார அதிகாரிகள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஏனைய விடயங்களின் தேவைப்பாடுகள் தொடர்பாக விசாரித்தார். மேலும் இவ் வைரஸ் மேலும் பரவுவதை தடுக்கும் முகமாக இரு நாடுகளுக்குமிடையிலான மருத்துவ நிபுணர்கள்இ அனுபவங்கள் மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ளும் அதேவேளை இந்த உலகளாவிய அச்சுறுத்தலை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தை பற்றியும் எடுத்துரைத்தார்.

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு தனிமைப்படுத்தல் நிலையங்களின் எண்ணிக்கை, அதன் அமைவிடங்கள் மற்றும் அத் தனிமைப்படுத்தல் நிலையங்களில் காணப்படும் வசதிகள் தொடர்பாக விளக்கமளித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54