மூவரின் நிலைமை கவலைக்கிடம்..!: 48 மணி நேரத்தில் புதிய கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளங் காணப்படவில்லை

Published By: J.G.Stephan

26 Mar, 2020 | 07:36 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)
நாட்டில் இன்று இரவு 7.00 மணியுடன் நிறைவுற்ற 48 மணி நேர காலப்பகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட எந்த தொற்றாளரும் கண்டறியப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  

இக்காலப்பகுதியில் வைத்தியசாலைகளில் சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரின் இரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் 4 ஆய்வு கூடங்களில் பரிசோதனைகளை முன்னெடுத்த போதும் எவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு தெரிவித்தது.

எவ்வாறாயினும் சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு அமைய, தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 95 பேர் 3 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இவர்களில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் 84 பேரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன் அவர்கள் மூவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விட மேலும் 10 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைப் பெற்று வருவதாக  சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.



இதனிடையே நாடளாவிய ரீதியில், கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 237 பேர் 21 வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த 237 பேரில் ஐந்து பேர் வெளிநாட்டவர்களாவர். சந்தேகத்தில் சிகிச்சைப் பெறும் அதிகமானோர் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலேயே சிகிச்சைப் பெறும் நிலையில் அங்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்னிக்கை 100 ஆகும். இதனைவிட விஷேடமாக வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் 25 பேரும்  ஹோமாகம வைத்தியசாலையில் 17 பேரும் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் 15 பேரும்  ராகமவில் 11 பேரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் 10 பேரும் சிகிச்சைப் பெறுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது.

 இதனிடையே கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து குறித்த நாடுகளில் வசித்து வந்தவர்களாவர்கள் என கூறப்படுகின்றது.

சுவிட்ஸர்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதான ஒருவரும், பிரான்ஸில் வசித்து வந்த யாழ்ப்பாணம் – தாவடியை பிறப்பிடமாகக் கொண்ட 32 வயதான ஒருவரும் கொரோனா தொற்று அறிகுறியுடன் உயிரிழந்துள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.

எனினும் அவ்விருவரும் கொரோனா தொற்று காரணமாகத்தான் உயிரிழந்தார்களா என்பதை வெளிவிவகார அமைச்சினால் உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை.

பிரான்ஸில் இலங்கை பிரஜை ஒருவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்திருந்ததாகவும், சுவிட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டாலும், மரணத்திற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சின்  பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இதனிடையே உலகில் 195 நாடுகளில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு கண்டறியப்பட்ட தொற்றாளர்களின் எண்னிக்கை 4 இலட்சத்து 71 ஆயிரத்து 36 ஆகும். அதில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 228 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளதுடன் 21 ஆயிரத்து 284 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28