. கொரோனா வைரஸ் நோயாளிகளின் மருத்துவமனையை குண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டவர் - அமெரிக்காவில் சுட்டுக்கொலை

26 Mar, 2020 | 06:19 PM
image

அமெரிக்காவின மிசூரியில்  கொரோன வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையை குண்டுவைத்து தகர்ப்பதற்கு திட்டமிட்ட நபர் ஒருவர் எவ்பிஐயுடனான துப்பாக்கி மோதலின் போது சுட்டுக்கொல்லப்பட்டு;ள்ளார்.

உள்ளுர் பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகளிற்காக குறிப்பிட்ட நபரை பெல்டென் நகரில் அதிகாரிகள் கைதுசெய்ய முயன்றவேளை இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் அந்த நபர் கொல்லப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட நபர் பல இலக்குகளை திட்டமிட்டபோதிலும் இறுதியாக மருத்துவமனையை தெரிவு செய்திருந்தார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திமோதி ஆர் வில்சன் என்ற சந்தேகநபர் பல மாதங்களாக கண்காணிப்பின் காணப்பட்டார் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர் கறுப்பின மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலை மசூதி போன்றவற்றை  தாக்க திட்டமிட்டிருந்தார் என தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் பெல்டென் நகரில் இனந்தெரியாத மருத்துவமனையை தகர்க்க திட்டமிட்டார் என அதிகாரிகள்  கன்சாஸ் நகர மக்களை எச்சரித்திருந்ததுடன் அவர்களை வீடுகளிற்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அவர் பல இலக்குகளை தெரிவு செய்த பின்னர் இறுதியாக பலரிற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக ஒரு மருத்துவமiயை  தெரிவு செய்தார் அது இன்றைய சூழலில் மிக முக்கியமான மருத்துவ சேவையை வழங்கிக்கொண்டிருக்கும் மருத்துவமனை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெடிகுண்டை தயாரிப்பதற்கான அத்தியாவசியமான பொருட்களை அந்த நபர் பெற்றிருந்தார் என எவ்பிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் அவரை கைதுசெய்ய முயன்றவேளை மோதல் இடம்பெற்றுள்ளது அவ்வேளை அந்த நபர் வெடிபொருள் ஒன்றினை பயன்படுத்த முனைந்துள்ளார், அதனை தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தின் போது அவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17