ரஸ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதை தொடர்ந்து மொஸ்கோ அனைத்து உணவுவிடுதிகள் கடைகள் மதுபான சாலைகள் உட்பட பொதுமக்கள் கூடுமிடங்கள் அனைத்தையும் 28ம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை மூடும்படி உத்தரவிட்டுள்ளது.

ரஸ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 186 கொரோனா வைரஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 136 பேர் மொஸ்கோவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். . இதனை தொடர்ந்து ரஸ்யாவில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 840 ஆக அதிகரித்துள்ளது இதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து விளாடிமிர் புட்டின் கடுமையான நடவடிக்கைகளிற்கு உத்தரவிட்டுள்ளார்.

27ம் திகதி முதல் அனைத்து சர்வதேச விமானசேவைகளிற்கும் புட்டின் தடை விதித்துள்ளார்.