கொழும்பு மாநகர சபை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த மரக்கறிகள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை கொழும்பு 15 மட்டக்குளி, காக்கைதீவு நலன்புரி சங்கத்தினதும் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்றது.

இவ்வாறு மரக்கறி வகைகளை உள்ளடக்கிய பொதியை கடந்த 24 ஆம் திகதி மார்ச் மாதம் காலை 6 மணி முதல் கொழும்பில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட வேளைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அந்தவகையில் சாஞ்சிஆராச்சி கார்டன் பிளேஸ், மகாவித்தியாலய மாவத்தை(மஹ்ரூப் தண்ணீர் தாங்கி அருகில்), ஜிந்துப்பிட்டிய வீதி (பொலிஸ் நிலையம் அருகில்), புளூமென்டால் மாவத்தை பொலிஸ் நிலையம் அருகில், ரிபாய் தங்கல்ல வீதி(பள்ளிவாசல் அருகில்), நியூகம் சதுக்கம், ஆமர் வீதி தொடர்மாடி, கிராண்ட்பாஸ் டிமல்  தோட்டம், சுவர்ண சைத்திய மாவத்தை, சாந்த ஜோன்ஸ் வீதி, நவகம்புற விளையாட்டு மைதானத்தின் அருகில் , கிராண்ட்பாஸ் ஸ்டேட் புற , போதிராஜ  மாவத்தை மன்சில்  சனசமூக நிலையம் அருகில், 10 வது தோட்டம் சனசமூகநிலையம் மட்டக்குளி , 17வது ஒழுங்கை கல்லூரி வீதி கொட்டாஞ்சேனை விளையாட்டு மைதானம் அருகில், ஸ்ரீ விக்கிரமபுர சனசமூக நிலையம், விஸ்வைக் விளையாட்டு மைதானம், போனோ விஸ்டா நலன்புரி நிலையம் மோதர, முத்துவெள்ள விளையாட்டு மைதானம், ஹேனமுல்ல விளையாட்டு மைதானம், கொட்டாஞ்சேனை மேப்பில் ஒழுங்கை நீச்சல் தடாகம், ஸ்டேடியம் கம சனசமூக நிலையம்,  ராமநாதன் மாவத்தை சனசமூகநிலையம்,  காக்கைதீவு நலன்புரி மண்டபம் ஆகிய பகுதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்வாறு மரக்கறிகள் Orgo பார்மில் இருந்து எடுக்கப்பட்டு சாகய விலையில் வழங்கியதால் குறித்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பலர் பெரிதும் நன்மையடைந்தது மட்டுமல்லது. அவர்கள் ஏனையோருக்கும் தமக்கு கிடைத்த மரக்கறிகளை பகிர்ந்தளித்தமை விசேட அம்சமாகும்.

இவ்வாறான செய்பாடுகளை வரவேற்கும் மக்கள், ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள தினங்களில் இவ்வாறு தமக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.