(இராஜதுரை ஹஷான்)

அத்தியாவசிய பொருட்கள் மே மாதம் வரைக்கும் தேவையான அளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே பொதுமக்கள் தற்போதைய நிலையில் தேவையான அளவில் மாத்திரம் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி மற்றும் சந்தைப்படுத்தல் சங்கத்தின் தலைவர் ஜி.ராஜேந்ர கோரிக்கை விடுத்தார்.

அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி தற்போதைய நாட்டு நிலைமையினை கருத்திற் கொண்டு பல தீர்மானங்களை எடுத்துள்ளது.

அன்றாட தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தற்போதைய நிலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளள.

சந்தைப்படுத்தல் மற்றும் விவசாய அமைச்சின் ஊடாக வீடுகளுக்கு பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள்  எடுக்கப்பட்டுள்ளன.

மே மாதம் வரைக்கும் அத்தியாவசியப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதால் நுகர்வோர் பொருட்களை தேவையான அளவில் கொள்வனவு செய்ய வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா ஊரடங்கு சட்டத்தால் முடக்கப்பட்டாலும் அத்தியாவசிய பொருள் இறக்குமதியில் எவ்வித நெருக்கடியும் ஏற்படாது என சங்கத்தினர் தெரிவித்தனர்.