பயிற்சி மற்றும் வியாபார தேவைகள் ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகளை உறுதி செய்யும் வகையில், சிங்கர் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான சிங்கர் தொழிற்பயிற்சி கல்வியகம், இலங்கையின் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி கற்கைகளை வழங்கி வருகிறது. 

இவற்றின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பெருமளவு பங்களிப்பை வழங்க முடியும் என எதிர்பார்க்கிறது. சிங்கரின் பாரம்பரியம் என்பது 164 வருடங்களுக்கு மேலானதாக அமைந்துள்ளதுடன், தொடர்ச்சியான 10 ஆண்டுகளாக முதற்தர வர்த்தக நாமமாக அமைந்துள்ளது. 

தொழிற்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் மூலமாக உள்நாட்டு இளைஞர்களுக்கு புதிய ஆளுமைகளை விருத்தி செய்து கொள்ளக்கூடியதாகவுள்ளதுடன் கல்வி இலக்குகளை எய்தக்கூடியதாகவும் புதிய தலைமுறை மற்றும் அதிகளவு தகைமை வாய்ந்த ஊக்குவிப்புகளுடன் கூடிய ஊழியர்கள் குழுவையும் உருவாக்கக்கூடியதாகவுள்ளது.

சிங்கர் ஸ்ரீ லங்கா பி.எல்.சி.யின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ் கருத்து தெரிவிக்கையில்,

“எமது தொழிற்பயிற்சிக் கற்கைகளை பங்கேற்கும் மாணவர்கள் தமக்கு உதவிகளை வழங்குவதற்கும் புதிய ஆளுமைகளை விருத்தி செய்து, தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை அதிகம் பெறுவார்கள். உள்நாட்டு தொழிற்சமூகத்துக்கு கல்வியறிவை வழங்குவதன் மூலம் எமது வியாபாரங்களுக்கு நாம் பெறுமதி சேர்க்கிறோம்.

அத்துடன் பொருளாதாரத்தில் நேர்த்தியான பங்களிப்பை வழங்குகிறோம். மாணவர்கள் பிரகாசமான எதிர்காலத்தைப் பெறுவார்கள்” என்றார்.

தொழிற் கல்வி பாடநெறி மற்றும் தொழில் பயிற்சி மூலமாக கல்வியகத்தினால் ஆரம்ப கட்டமாக கணினி வன்பொருள் தொழில்நுட்பவியலாளர்கள் கற்கைநெறி மற்றும் விற்பனை முகாமைத்துவ கற்கைநெறி போன்றவை முன்னெடுக்கப்படுகின்றன.

சிங்கர் தொழிற்பயிற்சி கல்வியகம் என்பது இந்த இரு பயிற்சித் திட்டங்களை முன்னெடுப்பதில் தன்னை ஈடுபடுத்தியுள்ளது என்பதுடன் சிங்கர் குழுமம் விற்பனையில் சிறந்த பெறுபேறுகளை கொண்டுள்ளதுடன் இலங்கையின் கலாசாரத்தை புரிந்து கொள்வதில் சிறந்த அனுபவத்தை கொண்டுள்ளது. அத்துடன் நாடு முழுவதும் 400க்கும் அதிகமான கிளை வலையமைப்புகளை கொண்டுள்ளது.

மேலும், உள்நாட்டு விற்பனை பிரதிநிதிகள் எவ்வித சான்றளிக்கப்பட்ட கல்விசார் தகைமைகளை கொண்டிருப்பதில்லை என்பதை கல்வியகம் அறிந்துள்ளது. புதிய விற்பனை முகாமைத்துவ கற்கை மூலமாக, இந்த இடைவெளியை நிரப்பி,பங்குபற்றுநர்களுக்கு அவசியமான அறிவு மற்றும் ஆளுமைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பங்குபற்றுநர்களுக்கான நிகழ்ச்சிகளில் தொழில்சார் பயிற்சிகள் துறையில் வழங்கப்படும்.

உள்நாட்டு கணினிச் சந்தையில் சிங்கர் உறுதியான பங்களிப்பை வழங்கியிருந்தது. கணினியில் பழுதுபார்ப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய ஆளுமை படைத்த தொழில்நுட்பவியலாளர்கள் தேவையாக உள்ளது. கணினி பயன்பாடு என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், தகைமை வாய்ந்த நிபுணர்களின் தேவையும் அதிகரித்த வண்ணமுள்ளது.

கல்வியகத்தின் கணினி வன்பொருள் தொழில்நுட்பவியலாளர்களுக்கான பயிற்சி என்பது பங்குபற்றுநர்களுக்கு ஆளுமை படைத்த ஊழியர்களாக துறையில் திகழ உதவுகிறது. கல்வியகம் சிங்கருக்கு வழங்கப்படும் கணினி பழுதுபார்ப்புகளை எதிர்காலத்தில் இவர்களுக்கு பெற்றுக் கொடுக்க திட்டமிட்டவண்ணமுள்ளது.

இந்த கற்கைகளுக்கான இலக்கு வைக்கப்பட்டுள்ளவர்களில் பாடசாலையை விட்டு விலகியவர்கள் அல்லது இளைஞர்கள் உள்ளடங்கியுள்ளனர். 

தொழில்முயற்சியாண்மையை அடிப்படையாக கொண்டு இந்த கற்கை முன்னெடுக்கப்படுகிறது. நபர் ஒருவருக்கு சொந்தமான முகவர் நிறுவனமொன்றை உருவாக்கிக் கொள்வதற்கான ஊக்குவிப்புகளையும் இந்த கற்கை வழங்கும்.

கணினி பயிற்சிக்கு மேலதிகமாக, கல்வியகத்தினால் விற்பனையக பங்காளர் சான்றளிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக புகழ்பெற்ற சர்வதேச கணினி வழங்குநருடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளது.

தேசிய தொழிற்பயிற்சி வழிகாட்டல்களை இந்த இரு நிகழ்ச்சிகளும் பின்பற்றுவதுடன் உள்நாட்டு கல்வி அதிகாரிகளின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும்.

இந்த நிகழ்ச்சிகளை மேம்படுத்தும் வகையில், கல்வியகத்தின் முன்னுரிமை என்பது தமது மாணவர்களுக்கு மதிப்புக்குரிய தொழிற்பயிற்சி பட்டத்தை பெற்றுக் கொடுத்து அதன் மூலம் அவர்களின் தொழில்நிலைக்கு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்துவதாகும்.

விற்பனை முகாமைத்துவம் மற்றும் கணினி வன்பொருள் கற்கைகளுக்கு ஆர்வமுள்ள மாணவர்கள் 2016 ஜுன் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு கோரப்படுகின்றனர். கேள்வியை பொறுத்து ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் கற்கை நெறிக்கு இணைத்துக் கொள்ளப்படும்.

பங்குபற்றுநர்களின் சௌகர்யத்தை கவனத்தில் கொண்டு, வகுப்புகள் வார இறுதி நாட்களிலும் நடைபெறும், இதன் மூலமாக தொழில்புரியும் மாணவர்களுக்கும் கற்கையை தொடர முடியும்.