தென் கொரியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 96 வயதுடைய மூதாட்டி ஒருவர் பூரண குணமடைந்துள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி மீண்ட தென்கொரியாவின் வயது மிகுந்த நபராக தற்போது இவர் கருதப்படுகிறார்.

தென் கொரியாவின் 'Cheongdo County' என்ற பகுதியைச் சேர்ந்த  ஹ்வாங்  என்ற மூதாட்டியே இவ்வாறு குணமடைந்துள்ளார்.

மார்ச் 13 ஆம் திகதி ஹ்வாங் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டது. இதன் பின்னர் குறித்த பகுதிக்கு அருகில் உள்ள மருத்துவ நிலையமொன்றில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குணமடைந்துள்ளார்.

தற்போது ஹ்வாங், அவரது மகனுடன்  சியோங்டோவில் உள்ள வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் உள்ள்மையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : CNN