கொழும்பின் சில பகுதிகளில் இன்று (26.03.2020 ) நீர் வெட்டு அமுல்கடுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

திடீர் திருத்தப்பணி காராணமாக குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணி முதல் இரவு 10 மணி வரை கொழும்பு 1, 2, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, ஆகிய பகுதிகளில் குறித்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்தல் விடுத்துள்ளது. 

அத்தோடு கொழும்பு 4 மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்த்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.