கேரளா கஞ்சாவை விற்பனைக்கு தயார் நிலையில் வைத்திருந்த மூவரையும், உள்நாட்டு கஞ்சாவை விற்பனை செய்த ஒருவருமாக நால்வரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மதுவரி திணைக்கள சிரேஷ்ட மதுவரி அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார். 

இன்று காலை நடாத்திய சுற்றிவளைப்பில், காத்தான்குடி முதியோர் இல்ல வீதியில் வீடொன்றில் கேரளா கஞ்சாவை பொதி செய்து விற்பனைக்காக தயாராக வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன் கர்பலா வீதியில் உள்நாட்டு கஞ்சாவை விற்பனை செய்த ஒருவரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜவ்பர்கான்