கொரோனா வைரஸால் உலக முழுதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின்எண்ணிக்கை 5 இலட்சத்தை நெருங்கி வருகிறது . இதில் 1 இலட்சத்து 14 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்கள்.

சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. சீனாவில் இதுவரை 81,285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3,287 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 683 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 7,503 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 74, 386 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 656 பேர் உயிரிழந்த நிலையில் இறப்பு எண்ணிக்கை 3,647 ஆக உயர்ந்துள்ளது. இந்த அளவு சீனாவை விட அதிகமாகும். ஸ்பெயினில் 49, 515 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இல்லாத அளவாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 10,941 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65, 797 ஆகவும், உயிரிழப்பு 935 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஈரானில் 27,0 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,077 ஆக அதிகரித்துள்ளது.பிரான்ஸில் 25, 233 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு 1,331 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உலக முழுதும் 175 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.