நியூயோர்க்கின் எல்ம்ஹேர்ஸ்ட் மருத்துவமனையில்  24 மணிநேரத்தில் 13பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியூயோர்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வாய்கிழiமைக்கும் புதன் கிழமைக்கும் இடையில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன, இந்த மரணங்களிற்கும் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையின் அளவிற்கும் தொடர்பு காணப்படுகின்றது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த மருத்துவமனை நெருக்கடி நிலையில் உள்ளது பொது சுகாதார நடவடிக்கையை பொறுத்தவரை இதுவே எங்களது முக்கிய முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை காப்பாற்றுவதற்காக மருத்துவமனையின் பணியாளர்கள் அனைத்தையும் செய்கின்றனர் என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் துரதிஸ்டவசமாக இந்த நோய் உயிர்களை அதிகளவில் காவுகொள்கின்றது குறிப்பாக முதியவர்களும் வேறுநோய் பாதிப்பிற்கு உட்பட்டிருந்தவர்களும் அதிகம் இறக்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிலர் அவசரசேவை பிரிவில் உயிரிழந்துள்ளனர் சிலர் வைரஸ் பரிசோதனைக்காக காத்திருந்தவேளை உயிரிழந்துள்ளனர் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது