கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்,பிரதேச பரிசோதனை செய்யவேண்டிய உடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் நியுயோர்க்கின் பெல்வ்யூ மருத்துவமனை தற்காலிக பிரேதஅறைகளை  உருவாக்கியுள்ளது.

மருத்துவமனைக்கு முன்பாக தற்காலி கூடாரங்கள், குளிரூட்டப்பட்ட டிரெய்லர்கள் ஆகியவற்றை காண்பிக்கும் படங்கள் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

நியுயோர்க்கின் ஏனைய மருத்துவமனைகளிலும் தற்காலி பிரதே அறைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகரம் முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் தற்காலிக பிரேதஅறைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 11 தாக்குதல் இடம்பெற்றவேளை பெல்வ்யூ மருத்துவமனையில் தற்காலிக பிரேத அறைகள் ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சாதாரண நாட்களில் நகரத்தின் பிரேத அறைகளால் 900 உடல்களை கையாள முடியும் நகரத்தின் மருத்துவ பரிசோதகரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை நாங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை ஆனால் எதிர்வரும் நாட்களில் உயிரிழப்பவர்களின் வீதம் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் செயற்படுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூடாரங்கள் மற்றும் டிரக் வாகனங்களால் 3500 உடல்களை கையாள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரசினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அடுத்த மூன்று வாரங்களில் உச்சநிலையை எட்டலாம் என அமெரிக்காவின் பிரபல தொற்றுநோயியல்  நிபுணர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த மூன்று வாரங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சநிலையை அடையும் அந்த காலப்பகுதிக்குள் அனேகமான பாதிப்புகள் இடம்பெற்றிருக்கும் என அமெரிக்காவின் பிரபல தொற்றுநோயியல்  நிபுணர் ஐரா லொங்கினி தெரிவித்துள்ளார்.

அடுத்த மூன்று வாரங்களில் அமெரிக்காவில் உயிரிழப்பவர்களில் எண்ணிக்கை உயர்நிலையை அடையும் என தெரிவித்துள்ள அவர் இரண்டு மூன்று நாட்களில் இரட்டிப்பாகும் எனவும் தெரிவித்துள்ளார்.