தொலைபேசி ஓடர்கள் மூலம் வீடுகளுக்கே எரிவாயுவை விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றையும் உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பசில் ராஜபக்ஷ அவர்கள் அந்நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கமைய லிட்ரோ மற்றும் லாப்ஸ் கேஸ் நிறுவனங்கள் நாடு முழுவதும் தமது நடமாடும் சேவைகளை முன்னெடுத்துள்ளன.


நுகர்வோரின் வேண்டுகோளுக்கமைய (தொலைபேசி வாயிலாகவும் அழைக்கலாம்)அவர்களின் வீடுகளுக்கே சமயல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.