அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக்ஒபாமா தனக்குள்ள பாரிய சமூக ஊடக தளத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸ் குறித்து பல கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றார்.

டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல விடயங்கள் குறித்து மௌனமாகயிருந்த ஒபாமா தற்போது டுவிட்டரில் பல பதிவுகளை வெளியிட்டு வருவதுடன் அவற்றினை முகநூலில் மீள்பதிவு செய்துவருகின்றார்.

பராக் ஒபாமா பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதுடன் வைரசினை எதிர்த்து போரிடுவதற்கான புதிய நடவடிக்கைகளி;ற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தி வருகின்றார்.

வைரஸ் நெருக்கடியின் போது அமைப்புகளும் தனிநபர்களும் முன்னெடுத்துள்ள மனதிற்கு வலிமையையும் நம்பிக்கையையும் நடவடிக்கைகள் குறித்த பதிவுகளை அவர் வெளியிட்டு வருகின்றார்.

ஒபாமாவின் பதிவுகளிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதுடன் பலர் அதற்கு பதில்களையும் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

வைரஸ் எண்ணிக்கை அதிகரித்து செல்வதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என வோசிங்டன் போஸ்ட் வெளியிட்ட தகவலிற்கான ஒபமாவின் டுவிட்டர் கருத்தினை கடந்த வாரம் 120,000 பேர் மீள்பதிவிட்டிருந்தனர்.

வோசிங்டன் போஸ்டின் மிகவும் வாசிக்கப்பட்ட தகவலாக அது மாறியுள்ளது என  போஸ்டின் செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சரியான விடயங்களை செய்து ஏன் வீடுகளிற்குள் இருக்கவேண்டும் என்பதை இந்த கட்டுரை தெரிவிக்கின்றது, எங்கள் அனைவராலும்  வைரஸ் பரவுவதை தடுக்க உதவ முடியும்,முதியவர்களை பலவீனமானவர்களை பாதுகாக்க முடியும்,என ஒபாமா தெரிவித்திருந்தார்.

கடந்த வாரங்களில் ஒபாமா டுவிட்டரில் பல பதிவுகளை வெளியிட்டுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி பொதுமக்கள் பார்க்ககூடிய பரிமாறிக்கொள்ளக்கூடிய பொது சுகாதாரம் தொடர்பான கருத்துக்களை வெளியிடவிரும்புகின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

இது குழப்பமான விடயம் என்பதால் விஞ்ஞான அடிப்படையில் விடயங்களை முன்வைப்பது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும் மக்கள் அறிந்துகொள்ளக்கூடிய விளங்கிக்கொள்ளக்கூடிய பொதுசுகாதார கருத்துக்களை வெளியிடவேண்டும் என  ஒபாமா கருதுகின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்  தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக மக்கள் பயனுள்ள விடயங்களை அறிந்துகொள்ளவேண்டும் என அவர் விரும்புகின்றார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நெருக்கடியான தருணத்தில் மிக முக்கியமான பணியை மேற்கொண்டுள்ளவர்களை தூக்கிவிடுவதற்கு ஒபாமா விரும்புகின்றார்,உந்துசக்தியை  ஏற்படுத்தக்கூடிய அந்த பதிவுகள் அதனை வாசிப்பவர்களிற்கு மனோதைரியத்தை வழங்கும் என ஒபாமா கருகின்றார் எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரையில் டிரம்பினை விமர்சிக்காத ஒபாமா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் முன்னரங்கில் நிற்பவர்களிற்கு பெரும் நன்றிக்கடனை வெளியிட்டு வருகின்றார்.

உங்கள் அயலில் உள்ள முதியவர்கள் பலவீனமானவர்களை தொலைபேசி தொடர்புகொண்டு அவர்களது நிலையை அறிந்துகொள்ளுங்கள் என அவர் ஆலோசனை வழங்கி வருகின்றார்.

எதிர்வரும் காலங்களில் நாங்கள் எதனை எதிர்பார்க்கவேண்டும் என்பதையும் அவர் நினைவுபடுத்தி வருகின்றார்.