சர்வதேச ரீதியில் நிர்மாணத்துறையில் முன்னோடியாக திகழும் LafargeHolcim குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமான ஹொல்சிம் லங்கா, தனது விநியோகஸ்த்தர்களை கௌரவிக்கும் வருடாந்த விநியோகஸ்த்தர் ஒன்றுகூடலை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

தமது முதன்நிலை விநியோக பங்காளர்கள் மற்றும் அவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது விநியோகஸ்த்தர்கள் மத்தியில் மொத்தமாக 53 விருதுகள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. 

வருடம் முழுவதும் அவர்கள் வெளிப்படுத்தியிருந்த நம்பிக்கை மற்றும் செயற்திறன் ஆகியவற்றை கௌரவித்து ஊக்கப்படுத்தும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டிருந்தன.

இந்த விருதுகளில் “ஆண்டின் சிறந்த விநியோகஸ்த்தர்” விருதும் இரு விநியோகஸ்த்தர்களுக்கும் வழங்கப்பட்டிருந்தது. இந்த விருதை பிலிமத்தலாவ நியு சென்ரல் ஸ்ரோர்ஸ் மற்றும் புத்தளம் சகுரா என்டர்பிரைசஸ் ஆகியன தமதாக்கியிருந்தன.

“அபே பெந்தீம” (எமது பிணைப்பு) எனும் தொனிப்பொருளில் ஹொல்சிம் லங்கா மூலமாக இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு 2016 ஜுன் மாதம் 3 ஆம் திகதி நீர்கொழும்பு, ஜெட்விங் ப்ளு ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

சிறிய, நடுத்தர மற்றும் பெரிய ஆகிய பிரிவுகளில் பிராந்திய மற்றும் தேசிய மட்டத்தில் இந்த விருதுகளை வழங்கப்பட்டிருந்தன. 

விருதுக்கான ஒவ்வொரு வெற்றியாளரும் அவரின் விற்பனை வினைத்திறன், சந்தையில் போட்டிகரத்தன்மையான செயற்பாடு மற்றும் வியாபார இயலுமை ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

ஹொல்சிம் லங்கா வணிக பணிப்பாளர், நளின் கருணாரட்ன இந்நிகழ்வின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

“ஹொல்சிம் லங்காவினால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகவும் அதிகளவு கவனத்தை ஈர்க்கும் நிகழ்வாகவும் பெருமளவானோர் பங்கேற்கும் நிகழ்வாகவும் இந்நிகழ்வு அமைந்துள்ளது.

ஹொல்சிம் லங்கா தயாரிப்புகள் தொடர்பில் சந்தை வலையமைப்பை உருவாக்குவதில் பங்களிப்பு வழங்கும் எமது விநியோகஸ்த்தர் வலையமைப்பின் முக்கியமான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்துள்ளது. 

மேலும், எதிர்கால இலங்கைக்கான உறுதியான அத்திபாரத்தை கட்டியெழுப்புவதற்கான எமது பயணத்தில் முக்கிய பங்காளர்களாக எமது விநியோகஸ்த்தர்கள் காணப்படுகின்றமைக்கு சிறந்த உதாரணமாக இது அமைந்துள்ளது” என்றார்.

விநியோகஸ்த்தர் விருதுகள் நிகழ்வில் 77 விநிகோஸ்த்தர்கள் தமது குடும்பத்தாருடன் பங்கேற்றிருந்தனர். ஹொல்சிம் லங்கா வரலாற்றில் இவர்கள் முக்கிய தடத்தை பதித்திருந்தனர்.

ஹொல்சிம் லங்காவின் விநியோக வலையமைப்பு என்பது நாட்டின் சகல பகுதிகளிலும் பரந்து காணப்படுவதுடன் அதன் கடந்த 25 வருடங்களுக்கு மேற்பட்ட உறவுடன் 6500க்கும் மேற்பட்ட நாடு முழுவதிலும் உள்ள சில்லறை விற்பனையாளர்களின் தேவையை பூர்த்தி செய்கிறது.

ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட் பற்றி

சர்வதேச ரீதியில் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் லபார்ஜ்ஹொல்சிம் குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாக ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட் செயற்படுகிறது. 

பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகன் எனும் வகையில், கம்பனி பொருளாதார, சமூக மற்றும் சூழல் சார் செயற்பாடுகளை நிலைபேறான அபிவிருத்திக்கமைய முன்னெடுத்து வருகிறது.

இலங்கையில் புகழ்பெற்ற கீர்த்தி நாமத்தை பதிவு செய்துள்ள ஹொல்சிம் (லங்கா) லிமிட்டெட், பல்வேறு வகையான சீமெந்து உற்பத்திகளை நாடு முழுவதும் வழங்கி வருகிறது. அத்துடன் ஹொல்சிம் புத்தாக்கம் மற்றும் அப்ளிகேஷன் நிலையத்தினூடாக தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும் வழங்கி வருகிறது. 

இதனூடாக பாரிய திட்டங்களுக்காக வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பொருத்தமான சீமெந்துக் கலவையை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். நாடு முழுவதும் பரந்தளவு காணப்படும் விநியோகஸ்த்தர் வலையமைப்பைக் கொண்டு தனது செயற்பாடுகளை நிறுவனம் முன்னெடுத்து வருகிறது.

“இலங்கையின் எதிர்காலத்துக்கான அத்திபாரத்தினை கட்டியெழுப்புவது” எனும் தொனிப்பொருளுக்கமைய இந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.