கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி ஸ்பெய்னில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 3,434 ஆக உயர்வடைந்துள்ளதாக அந் நாட்டு சுகாதார அமைச்சகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

இதன் மூலம் கொரோனாவினல் அதிகமாக உயிரிழப்புகள் ஏற்பட்ட இரண்டாவது நாடாக ஸ்பெய்ன் தற்போது பதிவாகியுள்ளது.

அத்துடன் ஸ்பெய்னில் மொத்தமாக கொரோனா தொற்றுக்குள்ளானவவர்களின் எண்ணிக்கையும் 47,610 ஆக காணப்படுகின்றது.

கொரோனா பரவலின் ஆரம்பமான நாடான சீனாவில் இதுவரை 3,281 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் கூறியுள்ளது.

இதேவேளை ‍அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளி விபரங்களின்படி இத்தாலியிலேயே கொரோனாவினால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. 

அங்கு மொத்தமாக 6,820 பேர் உயிரிழந்துள்ளனர்.

Photo Credit ; CNN