இன்று புதன்கிழமை மாலை 4.30 மணி வரை இலங்கையில் புதிய கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் பதிவாகவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த இரண்டாவது நபர் இன்று புதன்கிழமை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார். 

இதுவரை இலங்கையில் மொத்தமாக 102 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

இதில் இருவர் தீவிர கிசிச்சை பிரிவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நோய்த் தொற்று சந்தேகத்தில் 227 பேர் உள்ளனர்.

தனிமைப்படுத்தல் மருத்துவ கண்காணிப்பு நிலையங்களில் சுமார் 3300 பேரும், சுய தனிமைப்படுத்தலில் 15,000 பேர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.