கர்ப்பிணித் தாயொருவருக்கு கொரோனா : தனியார் வைத்தியசாலையொன்றுக்கு சீல்

25 Mar, 2020 | 05:29 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பாணந்துறை பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பெண் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளை மீறி மகப்பேற்று சிகிச்சைகளுக்கு சென்ற தனியார் வைத்தியசாலைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் குறித்த கர்ப்பிணி  தனியார் வைத்தியசாலைக்கு சென்ற போது, அவருடன் அங்கு மகப்பேற்று ஆலோசனைகளைப் பெற வந்தவர்கள், ஏனையோர் தொடர்பிலும் தற்போது சுகாதார அதிகாரிகளின் கவனம் திரும்பியுள்ளது.

பாணந்துறை பகுதியை வதிவிடமாக கொண்ட குறித்த கர்ப்பிணித் தாயின் வீட்டுக்கு வெளிநாட்டில் இருந்து அவரது உறவினர்கள் சிலர் வந்துள்ளனர்.

அவர்கள் அங்கு தங்கிருந்துவிட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளனர். இந் நிலையில் இது குறித்து அரிந்துள்ள சுகாதர அதிகாரிகள், அந்த கர்ப்பிணித் தாயை 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் வீட்டிலேயே சுய தனிமைபப்டுத்தலுக்கு உள்ளாகுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

எனினும் சுகாதார அதிகாரிகள் கொடுத்த ஆலோசனையை கணக்கில் கொள்ளாது அந்த கர்ப்பிணிப் பெண் பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளார்.

இந் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறை பகுதியின் தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கும் மகப்பேற்று ஆலோசனைகளைப் பெற அப்பெண் சென்று வந்துள்ளார்.

அதன் போது சுகாதார அதிகாரிகள் தனிமைப்பட கூறிய விடயம் உள்ளிட்ட அனைத்தையும் அவர் மறைத்துள்ளார்.

 இந் நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

 இதனையடுத்தே அப்பெண் சென்று வந்த இடங்கள் உள்ளிட்டவற்றை தேடிய பொலிசாரும்  சுகாதார பிரிவினரும், அவர் சிகிச்சைக்கு சென்ற தனியார் வைத்தியசாலைக்கும் சீல் வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலஞ்சம் பெற்றவர்கள் தொடர்பான தகவல்களை சத்தியக்கடதாசி...

2025-03-21 21:26:25
news-image

நீதவானாக நியமனம் பெறும் மலையக பெண்...

2025-03-21 22:20:56
news-image

2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மேலதிக வாக்குகளால்...

2025-03-21 22:12:31
news-image

உரமோசடியுடன் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளவர் குறித்து...

2025-03-21 22:07:45
news-image

மத்திய தபால் சேவை பரிமாற்று நிலையத்தில்...

2025-03-21 21:21:14
news-image

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி;...

2025-03-21 20:22:45
news-image

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...

2025-03-21 20:05:38
news-image

வெளிவிவகார அமைச்சர் மெளனமாக இருக்காது இஸ்ரேல்...

2025-03-21 16:34:59
news-image

யாழ். ஜனாதிபதி மாளிகையை வருமானம் ஈட்டும்...

2025-03-21 19:56:10
news-image

அமெரிக்க இந்தோ - பசுபிக் கட்டளைப்பீடத்தின்...

2025-03-21 18:16:14
news-image

யாழில் சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம்

2025-03-21 16:42:33
news-image

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ரூ...

2025-03-21 17:16:03