திருகோணமலையில் ஊரடங்கின் போதும் வீடு வீடாக விநியோகிக்க நடவடிக்கை!

25 Mar, 2020 | 06:06 PM
image

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட நேரத்தில் மக்கள் பிரதான பொதுச்சந்தையிலும் மீன் சந்தையிலும் கணக்கில்லாமல் கூடுவதனை குறைக்கும் முகமாக மரக்கறி மற்றும் மீன் இறைச்சி பொருட்களை திருகோணமலையில், பரவலாக பிரதானமாக சில இடங்களில் பகிர்ந்து விற்பனை செய்வது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஆளுனரின் ஆலோசனையின் பேரில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில்  நேற்று (24/3/2020) திகோணமலை கச்சேரியில் இடம்பெற்ற அவசர கூட்டத்தின் அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கமைய, 

திருகோணமலை பஸ்தரிப்பு நிலையத்திற்கருகில் உள்ள வாகனத்தரிப்பிடம்.

துறைமுகபொலிஸ் நிலையத்திற்கு முன்பதாக உள்ள பகுதி.

உவர்மலை பொலிசுக்கு முன்னால் உள்ள பகுதி.

மலையருவி சந்தைக்கு முன்னுள்ள பகுதி.

லிங்கநகர் IOC க்கு அருகில் உள்ள நகரசபை காணி.

மட்டிக்களி பகுதி.

அலஸ்தோட்டம் முகாம் பகுதி.

நான்காம் கட்டை சந்தி.

அபேபுர சந்தி.

சிறிமாபுர/ விஜிதபுர

சாம்பல்தீவு பாலத்தடி.

திருகோணமலை பிரதான வீதி.

ஆகிய பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

அரசாங்க அதிபர், அனர்த்தமுகாமைத்துவ உதவிப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், நகரசபை மற்றும் உப்புவெளி தவிசாளர்கள், வியாபார சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இப்பகுதிகளுக்கு வியாபாரிகளை பிரித்து அனுப்புவது தொடர்பாக வியாபாரிகள் சங்கத்தினர் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். 

அனைத்து பகுதிகளுக்கும் பகிர்ந்தனுப்புவதற்கு #வியாபாரிகள் பற்றாக்குறையாக இருப்பதனால் #விரும்பிய வியாபாரிகள் அல்லது வியாபாரம் செய்ய நினைப்பவர்கள் குறித்த பகுதிகளுக்கு சென்று விற்பனை நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனதெரிவிக்கப்ட்டுள்ளது. 

இது தவிர பொது மக்கள் இயலுமானவரை தங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒருவிற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்யுமாரும்,  மேற்குறித்த இடங்கள் தவிர்ந்து வீதியோர வியாபாரிகளுக்கு முன்னுரிமைக் கொடுத்து அவர்களிடமும் பொருட்களை கொள்வனவு செய்யும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன்...

2026-04-19 06:44:33
news-image

இன்றைய வானிலை

2026-04-19 06:28:44
news-image

ILO-190 உடன்படிக்கையை அங்கீகரித்த 55-வது நாடாக...

2026-04-18 18:04:25
news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச...

2026-04-18 18:19:37
news-image

அம்பலாங்கொடையில் ஹெரோயினுடன் பாதாள உலகக் குழு...

2026-04-18 18:05:26
news-image

சிறுபோக நெற்செய்கையை தமது சொந்தக்காணிகளில் மேற்கொள்ள...

2026-04-18 17:46:32
news-image

ராகமவில் பெண்னொருவரை சித்திரவதைக்குள்ளாக்கி தலைமுடியை வெட்டிய...

2026-04-18 17:15:39
news-image

ஆணமடுவவில் வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர்...

2026-04-18 16:55:58
news-image

இந்தியத் துணை ஜனாதிபதியின் இலங்கை விஜயம்:...

2026-04-18 16:04:40
news-image

ஹாலி-எல பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி...

2026-04-18 15:46:41
news-image

மலையகத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை அந்தஸ்து...

2026-04-18 15:11:20
news-image

​"மக்கள் எழுச்சிக்கு பணிந்தது அரசாங்கம்: நிலக்கரி...

2026-04-18 14:48:48