இரண்டாம் எலிசபெத் மகாராணியின் புதல்வரும், பிரிட்டன் இளவசரருமான சார்ள்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும், அவர் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் 'Clarence House' விடுத்துள்ள அறிக்கையில்,

 இளவரசர் சார்ள்ஸ் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். எனினும் அவர் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். 

அரசு மற்றும் மருத்துவ ஆலோசனைகளின்படி, இளவரசர் சார்ள்ஸ் இப்போது ஸ்காட்லாந்தில் உள்ள வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்டுள்ளார்.

அண்மைய காலப் பகுதியில் அவர் பொது நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்தார் எனினும் எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானர் என்பது கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.