கழுத்தை அறுத்துகொள்வதாக தெரிவிக்கும் மஹிந்த 82 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி..!

Published By: Sivakumaran

21 Jun, 2016 | 12:36 PM
image

ஒரு டொலரையேனும் மோசடி செய்திருந்து அதனை நிரூபிக்கும் பட்சத்தில் தனது கழுத்தை அறுத்து கொள்வதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சுனாமி உதவித் திட்டத்தில் 82 மில்லியன் டொலர்களை மோசடி செய்துள்ளார் என பிரதி அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் உயர்மட்ட ஆட்சியாளர்கள் தான் 18 பில்லியன் டொலர்களை கொள்ளையிட்டுள்ளதாக சில சந்தர்ப்பங்களில் கூறியுள்ளதாகவும் தான் ஒரு டொலரையாவது திருடியதாக நிரூபித்தால் கழுத்தை அறுத்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜப்பான் டைம்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த  பிரதி அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க,

சுனாமி உதவி திட்ட மோசடியில் மஹிந்த ராஜபக்ஷவுடன் முன்னாள் பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸ் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநரான அஜித் நிவாட் கப்ராலும் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த மோசடிகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அனைவர் மீதும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானிலிருந்து பொய்யான அறிக்கைகளை வெளியிடாது தாய் நாட்டிற்கு வந்து அவரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு உரிய வகையில் விளக்கமளிக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51