இத்தாலியில் மெசினாவில் வசிக்கும் 70 வயதுடைய இலங்கையைச் சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக வெளியான தகவல் தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த தகவல் குறித்து மிலான் மற்றும் ரோமில் உள்ள இலங்கைத் தூதரங்கள் விசாரணை நடத்தி தெளிவுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசின்ஹ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே இத்தாலியில் 8 இலங்கையர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளி வந்த தகவலும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 70 வயதுடைய நபர் ஒருவர் மெசினாவில் மர்மான முறையில் உயிரிழந்துள்ளதாகவும், அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்திருக்கலாம் எனவும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

எனினும் எந்தவொரு உத்தியோகபூர்வ சர்வதேச ஊடகங்களிலோ இது தொடர்பான தவல்கள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.