ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பின் அவர் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நிலையில் குறித்த நோயாளியிடம்  இருந்து  59 ஆயிரம்  நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் சாத்தியம் உள்ளதாக லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆய்வறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஹியு மொண்டிகொமேரி இது குறித்த தகவலை தெரிவித்துள்ளார். 

அத்துடன் நாடுகளுக்கு இடையிலான மாறுபட்ட மருத்துவ திட்டங்கள் காரணமாக இதனை கட்டுப்படுத்த கடினத்தன்மை காணப்படுவதாகவும் மக்களின் உடல் தன்மைகளுக்கு ஏற்ப சிலருக்கு பத்து நாட்களில் மாற்றங்களை அவதானிக்க முடிவதாகவும் சிலருக்கு ஆரம்பத்தில் இதன் தாக்கம் உடலில் இருந்து விடுபடக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் கண்டரியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.