பாரிய ஊழல் மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 27 ஆம் திகதி  வாக்குமூலம் அளிக்க ஆஜராகுமாறுஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டியிலுள்ள புகையிரத திணைக்கள காணியொன்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்கவே அழைக்கப்பட்டுள்ளார்.