இலங்கையில், கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இரண்டாவது இலங்கைப் பிரஜை பூரணமாக குணமடைந்துள்ளதாக அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் பூரண குணமடைந்த நபர் இன்றைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

பெப்ரவரி மாதத்தில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சீனப் பெண்ணை தவிர்த்து, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட இரணடாவது நபர் இவர்.

நாட்டில் மொத்தமாக 102 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 225 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.