இலங்கையை மட்டுமன்றி முழு உலகையே நடுநடுங்க வைத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில், அரசாங்கம் மக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மேலும், பொதுமக்கள் தாம் பாதுகாப்பாக வீடுகளிலிருப்பதன் மூலம் நோய் தொற்றிலி்ருந்து விடுபடுமாறும், இதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்தவகையில், சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள் என 1999 என்ற எண்ணை சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், இவ்வெண் மூலம் கொரோனா தொற்று தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக சுகாதார மேம்பாட்டு பணியகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.