உரிய வழித்தடங்களுக்கு புறம்பாக பாதுகாப்பற்ற வகையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் 'வீதி ஒழுங்கு சட்டத்தை'  கொழும்பில் பல வீதிகளில் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

 இதன்படி, பௌத்தாலோக மாவத்தை, டுப்ளிகேசன் வீதி, நுகேகொடவின் அதிவேக வீதி தொடக்கம் கொழும்பு வரையிலான வீதியில் இந்த வீதி ஒழுங்கு சட்டம் வலுவாக கடைபிடிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

 குறித்த சட்டம் கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. முதலாவதாக கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர வீதியில் ஜயந்திபுரவிலிருந்து கொழுப்பு நகரம் வரை உள்ள வீதிகளில் அதிகளவில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு சட்டத்தை தவறிய சாரதிகள் பலர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.