ரஷ்யாவின் குரில் தீவுகளில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது  7.5 ரிச்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், குறித்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் சுனாமி எச்சரிக்கை ரத்துசெய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் குரில் தீவுகளில் கடலுக்கு அடியில் 37 கிலோ மீற்றர் ஆழத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டரில் 7.5 ஆக பதிவாகி இருக்கிறது.

பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் ஆரம்பத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 1,000 கிலோ மீற்றர் தூரத்திற்குள் அபாயகரமான சுனாமி ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக கூறியது. 

ஆனால் பின்னர் அது "இந்த பூகம்பத்தால் மிகச் சிறிய சுனாமி அலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டன, மேலும் எந்த அச்சுறுத்தலும் இல்லை" என்று அது கூறியுள்ளது.

ஏனெனில், சுனாமி அலைகள் 0.3 மீற்றருக்கும் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹவாய் தீவிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.