ஊரடங்கு காலத்தில் புதிய விடயங்களை கற்றுக் கொண்டு, தம்மை உற்சாகமாக வைத்துக் கொள்ள இருப்பதாக நடிகை காஜல் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவைரஸ் தொற்று பரவலை கட்டபடுத்தும் நோக்கில் இந்திய அரசாங்கம் நேற்று இரவு முதல், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் நடிகை காஜல்அகர்வால், 21 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதால் இதனை உபயோகமுள்ள நேரமாக மாற்றிக்கொள்ள தீர்மானித்திருக்கிறாராம்.

இதுகுறித்து ட்வீட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது...

“21 நாட்கள் என்பது, பழைய பழக்க வழக்கங்களை மறந்து, புதிய பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள போதுமான நாட்களாகும். நான் இணையதளம் மூலமாக கற்பிக்கப்படும் சில படிப்புகளை கற்க பதிவுசெய்திருக்கிறேன். எம்முடைய வாசிப்பு, தியானம், சமையல் மற்றும் வீட்டுப் பணிகளில்  புதிய விடயங்களை கற்கவும், நேரத்தை செலவழிக்கத் திட்டமிட்டிருக்கிறேன். நேரத்தின் அருமையை கருதி, பயனுள்ள விடயங்களில் முதலீடு செய்யவிருக்கிறேன்.”  என்று பதிவிட்டிருக்கிறார்.

இதனிடையே நடிகை காஜல்அகர்வால் விரைவில் தளபதி விஜய்யுடன் நடிக்கவிருப்பதாக சூசகமாக தெரிவித்திருக்கிறார்.அதாவது இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். தளபதி விஜய் இணையும் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில்இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன என்பதும், தற்போது கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.