'செய்திப்பத்திரிகைகள் மூலமாக கொவிட் - 19 எவருக்கும் பரவவில்லை'

25 Mar, 2020 | 10:13 AM
image

செய்திப்பத்திரிகைகள் மூலமாக அல்லது அவற்றினால் சுற்றப்பட்ட பொதிகளின மூலமாக கொரோனாவைரஸ்  ( கொவிட் --19) தொற்றுக்கு எவருமே இலக்காகவில்லை.

நுண்துளைகளைக் கொண்ட மேற்பரப்புக்களில் வைரஸ் உயிர்வாழ்வதில்லை என்பதை விஞ்ஞான ஆய்வுகள் வெளிக்காட்டியிருக்கின்றன. செய்திப்பத்திரிகைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற ' நியூஸ் பிறின்ற் ' ( Newsprint) என்கின்ற  தாளின் குறிப்பிட்ட வகையான தரிசுத்தன்மை ( Sterility ) பத்திரிகைகளை பாதுகாப்பானவையாக வைத்திருக்கிறது என்று உலகின் பிரபலமான விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் கூறியிருக்கிறார்கள்.

வேறுபட்ட மேற்பரப்புகளில் கொரோனாவைரஸின் பல்வகைப்படுகின்ற உறுதிநிலை குறித்த ஆய்வொன்றை உலகின் மிகவும் நம்பகத்தன்மையான மருத்துவ ஆராய்ச்சி சஞ்சிகையான ' New England Journal of Medicine '  வெளியிட்டிருக்கிறது.

செப்பின் ( Copper ) ஊடாகவும் அட்டைத்தாளின் ( Cardboard ) ஊடாகவும் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் மிகமிக குறைவு. செப்பின் அணுத்தன்மையும் ( Atomic makeup)  அட்டைத்தாளின் நுண்துளைகளைக் கொண்ட இழையமைப்புமே ( Porous texture)அதற்கு காரணம் என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. தூசிப்படலத்தின் (Aerosols ) ஊடாக மிகமிக உயர்ந்தளவுக்கும் பிளாஸ்ரிக் மற்றும் துருப்பிடிக்காத உருக்கின் (Stainless Steel ) ஊடாக கணிசமான உயர்ந்தளவுக்கும் தொற்று ஏற்படுகின்றது என்றும் ஆய்வு கூறுகின்றது.

கொரோனாவைரஸ் ஒவ்வொரு 66 நிமிடங்களுக்கும் அதன் வீரியத்தில் அரைவாசியை இழக்கிறது. ஒரு மேற்பரப்பை வந்தடைந்த பிறகு எட்டில் ஒரு வைரஸே மூன்று மணித்தியாலங்களுக்குப் பின்னர் தொற்றுநோயைத்தரக்கூடியதாக இருக்கிறது. 6 மணித்தியாலங்களுக்குப் பிறகு வைரஸில் அதன் வீரியத்தில் 2 சதவீதமே எஞ்சியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அழுத்தமான  - மிருதுவான, நுண்துளைகள் இல்லாத மேற்பரப்புகளில் வைரஸ் மிகவும் நீண்ட  காலநீடிப்பைக் கொண்டதாக இருக்கும். பிளாஸரிக்கிலும் துருப்பிடிக்காத உருக்கிலும் அது நிலைத்து உயிர் வாழும் என்றபோதிலும், 2--3 நாட்களில் அதன் வீரியம் படிப்படியாகக் குறைவடைந்துகொண்டுபோகும். அட்டைத்தாளில் வைரஸ் 24 மணி நேரத்துக்கு பிறகு உயிர்வாழாது. நியூஸ் பிறின்றில் அதைவிடவும் குறைவான நேரமே அது நீடிக்கும்.ஏனென்றால் அட்டைத்தாளை விடவும் நியூஸ் பிறின்ற் கூடுதலான அளவுக்கு நுண்துளைகளைக் கொண்டதாகும்.

நியூஸ் பிறின்ற் கொவிட் -19 கொரோனாவைரஸை பல கண்டங்களுக்கும் பரவச்செய்யலாம் என்ற தவறான தகவலை நிபுணர்கள் நிராகரித்திருக்கிறார்கள்."செய்திப்பத்திரிகைகள் அச்சிடப்படுகின்ற செயன்முறைகள் காரணமாக மிகவும் தரிசுத்தன்மையானவையாக இருக்கின்றன. செய்திப்பத்திரிகைகளினால் சுற்றப்பட்டு விற்கப்படுகின்ற  மீனையும் மற்றும் உணவுவகைகளையும் மக்கள் வழமையாக உண்கிறார்கள். அச்சிடும் முறையும் பயன்படுத்தப்படும் மையும் செய்திப்பத்திரிகைகளை மிகவும் தரிசுத்தன்மையாக்குகின்றன " என்று நோர்விச்சில் உள்ள ஜோன் இன்ஸ் நிலையத்தின் இரசாயனவியல் திணைக்களத்தின் செயற்திட்டத் தலைவரான பேராசிரியர் ஜோர்ஜ் லோமோனோசோவ் பி.பி.சி.க்கு கூறினார்.

இந்தியாவில் வைரஸ் தொற்றின் தோற்றுவாய்களைக் கண்டுபிடித்து கட்டுப்படுத்தும் பணி ஒப்படைக்கப்பட்டிருக்கும் அரசாங்க அமைப்புக்களையும் தலைசிறந்த மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பொதுச்சுகாதார நிறுவனங்களையும் சேர்ந்த முனமனணி நிபுணர்கள் செய்திப்பத்திரிகைகள் கொவிட் - 19 கொானோவைரஸை காவிச்செல்லக்கூடியவை என்ற தகவல் தவறானது என்று நிராகரித்திருப்பதுடன் அதற்கு எந்த விஞ்ஞானபூர்வமான ஆதார அடிப்படையும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

கொவிட் -- 19 கொரோனாவைரஸ் தொற்றுக்கான ஒரு மூலமாக செய்திப்பத்திரிகைகள் இருக்கலாம் என்பது உண்மைக்குப் புறம்பானது என்று நோய்க்கட்டுப்பாட்டுக்கான தேசிய நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் சுஜீத் கே.சிங் கூறினார்." அவ்வாறு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.அவ்வாறு நடக்கிறதென்றால், தொற்றை நிறுத்துவதற்காக நாம் அதை வெளிப்படையாகவே கூறியிருப்போம். செய்திப்பத்திரிகைகளின் மூலமாக அல்ல, இருமல், தும்மலின்போது பறக்கக்கூடிய ஈரத்தன்மையான துளிகள் மற்றும் தொற்றுக்குள்ளான மேற்பரப்புகளைக் கொண்ட துணி வகைகள், தளபாடங்கள், அடுக்களைக் கருவிகள் மற்றும் தட்டுமுட்டுச் சாமான்களின் மூலமாகவே  பெருமளவுக்கு பரவுகிறது என்பதே வைரஸ் பற்றி நாம் இப்போது நிச்சயமாகத் தெரிந்துவைத்திருக்கின்ற விடயமாகும் " என்று சிங் சொன்னார்.

நோய்த்தடுப்புக்கான தேசிய நிலையமும் ( டில்லி ) புனேயில் உள்ள தேசிய  நோய்நுண்ம ஆராய்ச்சி  நிறுவனமுமே மார்ச் 2 டில்லியிலும் ஹைதராபாத்திலும் முதன்முதலில் இருவருக்கு கொவிட் --19 வைரஸ் தொற்றியதாக அறிவிக்கப்பட்ட பிறகு அந்த வைரஸின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்ற இரு பிரதான ஆய்வுகூடங்களாகும்.

கொவிட் 19 வைரஸின் தொற்றுக்கு இலக்கான 14 பேரும் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடியவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்ற 50 பேரும் தனிமைப்படுத்திவைக்கப்பட்டிருக்கும் டில்லியின் சப்ஃடர்ஜுங வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பி.கே.திருப்பதியும் செய்திப்பத்திரிகைகள் வைரஸ் தொற்றை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கின்றன என்பது தவறானது என்ற டாக்டர் சிங்கின் கருத்தையே எதிரொலித்தார். " துவாய்கள், கதவுக்குமிழ்கள், கைப்பிடிகள், பிளாஸ்ரிக் பொருட்களே நன்கு தெரிந்த கிருமிக்காவிகளாகும்....ஆனால், எமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்ற ( ஏனைய  ) எல்லாப் பொருட்களுமே தொற்றைப் பரப்பப்போவதில்லை.செய்திப்பத்திரிகைகள் தொற்றை ஏற்படுத்துவதில்லை"என்று டாக்டர் திருப்பதி கூறினார்.

திறந்த வெளியில் வைரஸ் 4--5 மணித்தியாலங்களுக்கும் கூடுதலான நேரம் உயிர்வாழமுடியாததாகும் என்று டாக்டர் திருப்பதி சுட்டிக்காட்டினார்." ஈரப்பதன் கொண்ட மூடிய பகுதியில் வைரஸ்  பல நாட்களுக்கு உயிர்வாழமுடியும்.கதவுக்குமிழ்கள் கார்ச்சாவி போன்றவற்றிலும் அவ்வாறு இருக்கமுடியும்.செய்திப்பத்திரிகைகளை வாங்குவதையோ அல்லது வாசிப்பதையோ நிறுத்துமாறு எந்த ஆலோசனையும் வழங்கப்படவில்லை.செயதிப்பத்திரிகைகள் மிகவும் முக்கியத்தவம்வாய்ந்த தகவல்களை வழங்குகின்றன" என்றும் அவர் கூறினார்.

செய்திப்பத்திரிகைகள் மூலமாக அல்லது பால் பக்கெற் போன்ற பொருட்களின் மூலமாக வைரஸ் பரவமுடியும் என்று கூறுவதற்கு எந்தச் சான்று ஆதாரமும் கிடையாது என்று மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின்  தொற்றுநோயியல் பிரிவின் ஒரு சிரேஷ்ட விஞ்ஞானியான நிவேதிதா குப்தா கூறுகிறார்." இந்தப் பொருட்களைப் பெறுவதை நாம் நிறுத்தவேண்டும் என்று நான் நினைக்கவில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.கொவிட் --19 வைரஸின் தோற்றுவாயைக் கண்டறிந்து ஆவணப்படுத்தும் பொறுப்பு நிவேதிதாவின் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

பெங்களூரில் உள்ள இந்திய விஞ்ஞான நிறுவனத்தில் தொற்றுநோய்கள் ஆராய்ச்சிக்கான நிலையத்தின ஒரு  இணைப் பேராசிரியரான டாக்டர் அமித் சிங் 2009 எச்.1 என்.1 வைரஸ் பரவல் தொடர்பான 2011 ஆய்வொன்றை சுட்டிக்காட்டி கடதாசி, துணிவகைகள் அல்லது மெல்லிழைத்தாள் (Tissue ) போன்ற நுண்துளைகளைக்கொண்ட மேற்பரப்புகளையடைய பொருட்களின் மீது வைரஸ் உயிர்வாழ்வதில்லை என்றும் ஆனால், துருப்பிடிக்காத உருக்கு, பிளாஸ்ரிக், கண்ணாடி மற்றும் அலுமினியம் போன்றவற்றின் மேற்பரப்புகளில் 48 மணித்தியாலங்கள் வரை தங்கியிருக்கும் என்றும் கூறினார்."  இதற்கு காரணம் உலர்ந்ததும் நுண்துளைகளையுடையதுமான மேற்பரப்புகளில் வைரஸின் புரத உறை எளிதில் சிகதவடைந்துவிடுகிறது என்பதேயாகும்.அத்தகைய மற்பரப்புகளில் வைரஸ்கள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரையே உயிர் வாழலாம்.இது எச்.1என்.1 காய்ச்சல் தொற்றுநோய் அனுபவத்தில் இருந்து பெறப்பட்ட சான்றை அடிப்படையாகக் கொண்டே கூறப்படுகின்றது" என்று அமித் சிங் சொனனார்.

 உறையிடப்பட்ட பொதிகளைப் பெறுவது பாதுகாப்பானதா இல்லையா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் இணையத்தளத்தில் தவறான தகவல்கள் மற்றும் நம்பிக்கைகளை மறுதலிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பிரிவில் கூறியிருக்கிறது. " ஆம். தொற்றுக்குள்ளான ஒரு நபரினால் வர்த்தகப்பொருட்கள் மாசுபடுத்தப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் மிகவும் குறைவு.அத்துடன் வெவ்வேறுபட்ட சூழ்நிலைகள் மற்றும் வெப்பநிலைகளின் ஊடாக  நகர்த்தப்பட்டிருக்கக்கூடிய பொதியொன்றில் இருந்து கொவிட் -- 19 தொற்றை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் பரவுவதற்கான சாத்தியமும் மிக குறைவு " என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 எந்தவொரு தொற்றையும் ஏற்படுத்தக்கூடிய மூலமாக செய்திப்பத்திரிகைகள் விளங்குவதற்கான வாய்ப்பில்லை என்று வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியின் தகைசார் பேராசிரியர் டாக்டர் ரி.யாக்கோப் ஜோன் கூறுகிறார்.".செய்திப்பத்திரிகைகள் எமது வீடுகளை வந்தடைவதற்கு முன்னதாக அவற்றில் ஒரு சிலரின் கைகள் படுகின்றன. அந்த நபர்களில் எவரும் தொற்றுக்கு இலக்காகியிருந்தால், பத்திரிகையில் சில வைரஸ்கள் படிந்திருக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.ஆனால், அந்த வைரஸ்கள் பத்திரிகையில் இருந்து எம்மீது  பாயப்போவதில்லை.அவை காற்றுவெளியில் உயிர்வாழ்வதில்லை.நாம் பத்திரிகைகளை வாசிப்பதை நிறுத்தவேண்டியதில்லை.நாம் செய்யவேண்டியதெல்லாம் பத்திரிகைகளை வாசித்த பிறகு கைகளைக் கழுவவேண்டியதேயாகும்.பத்திரிகைகளை வாசித்தாலும் வாசிக்காவிட்டாலும் கூட நாம் கைகழுவத்தானே போகிறோம்" என்று இநா்திய மருத்துவ ஆராய்ச்சி கவுனசிலின் நோய்நுண்மவியல் ஆய்வுக்கான நிலையத்தின் முன்னாள் தலைவருமான ஜோன் கூறினார்.

செய்திப்பத்திரிகைகளின் காரணமாக எவருக்கும் தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என்று காந்தநகரில் உள்ள இந்திய பொதுச்சுகாதார நிறுவனத்தின் பணிப்பாளரான டாக்டர் டிலிப் மவ்லாங்கர் கூறுகிறார்." இது ஒரு அதீத கற்பனையாகும் என்ற நான் நினைக்கிறேன். உங்களது செய்திப்பத்திரிகை மீது எவராவது இருமக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா? அவ்வாறு சந்தேகம் எழுந்தால் பத்திரிகையை ஒரு மணித்தியாலத்துக்கு வெயிலில் காயப்போட வேண்டியதுதான்.வெளியில் வெப்பத்தில் வைரஸ் உயிர்வாழப்போவதில்லை" என்று அவர் குறிப்பிட்டார்.

மேற்பரப்பு, வெப்பநிலை மற்றும் ஈரப்பதன் மற்றும் அவை போன்ற பல காரணிகளில் ஒரு வைரஸின் உயிர்வாழ்வு தங்கியிருக்கிறது என்று டாக்டர் நிவேதிதா குப்தா கூறியிருக்கிறார்." இப்போது இந்திய பின்புலத்தில், வேறபட்ட மேற்பரப்புகளில் வைரஸ் எந்தளவு காலத்துக்கு உயிர்வாழும் என்பது பற்றிய தரவுகள் எம்மிடம் இல்லை.ஏனென்றால், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சமுதாயத்தில் தொற்று ஏற்பட்டிரு்கவில்லை.இதுவரையில் தொற்றுக்கு இலக்காகியிருப்பவர்கள் சகலருமே  வௌநாடுகளுக்கு பயணஞ்செய்தவர்களாக அல்லது கொவிட் --19 வைரஸ் தொற்றிக்கொண்ட ஒருவருடன் தொடர்புகொண்டவர்களாகவே இருககிறார்கள் " என்று நிவேதிதா விளக்கமளித்தார்.

( இந்துஸ்தான் ரைம்ஸ் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54