இந்திய பிரதமர் நரேந்திரமோடியின் 21 நாள் முடக்கல் அறிவிப்பிற்கு இந்திய அணித்தலைவர் விராட்கோலி உட்பட பல கிரிக்கெட் வீரர்கள் வரவேற்பை வெளியிட்டுள்ளனர்.

எங்கள் பிரதமர் அறிவித்துள்ளது போன்று நாடு முழுமையான முடக்கலிற்குள் செல்கின்றது என டுவிட்டரில் விராட்கோலி பதிவு செய்துள்ளார்.

எனது வேண்டுகோளும் இதுவே வீட்டில் இருங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19னை ஒழிப்பதற்கு சமூக தனிமைப்படுத்தலே ஒரே வழி என விராட்கோலி குறிப்பிட்டுள்ளார்.

இ;;ந்திய அணியின் தலைமைப்பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரியும் இதனை வரவேற்றுள்ளார்.இது இந்த தருணத்தின் மிகவும் அவசியமான தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

எனது வார்த்தைகளில் குழப்பமோ தயக்கமோயில்லை,இதுவே இந்த தருணத்தின் மிகவும் அவசியமான தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமரின் தலைமைத்துவத்தையும் பாராட்டியுள்ள ரவிசாஸ்திரி இந்தியா முன்னரை விட வலுமையானதாக மாறும் எனவும் தெரிவித்துள்ளார்.

புஜரா , அஸ்வின் உட்பட பல வீரர்கள் மக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.